முதல் சந்திப்பு – திருச்சி
செப்டம்பர் – 2015
நேரம்: காலை 10 மணி முதல், மாலை 5 மணி வரை
எவருமே ஒருவரை ஒருவர் பார்த்தது கிடையாது. தமிழகத்தின் மாற்றத்திற்காகவும் மற்றும் முன்னேற்றத்திற்காக அனைவரும் இணைந்தோம். சந்திப்பு மிகவும் பயனுள்ளதாயிருந்தது.
எவருமே ஒருவரை ஒருவர் பார்த்தது கிடையாது. தமிழகத்தின் மாற்றத்திற்காகவும் மற்றும் முன்னேற்றத்திற்காக அனைவரும் இணைந்தோம். சந்திப்பு மிகவும் பயனுள்ளதாயிருந்தது.
காலை சிற்றுண்டி முடித்தபிறகு சரியாக 10 மணிக்கு ஆரம்பிக்க பட்டது. சுமார் 150 நண்பர்கள் வந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினர்: மக்கள் சக்தி இயக்கம். தங்கம் சுந்தரம் அவர்கள்.
காலை 10 மணி to 11 மணி வரை: தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது. 150 நண்பர்களும் மிக சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டனர். சிறப்பு விருந்தினர் சிறிய உரையாற்றினார்.
காலை 11 மணி to 12 மணி வரை: ஒருங்கிணைப்பாளர் மூலம் நமது வழிகாட்டிகள் பற்றியும், இளையதலைமுறை பற்றியும், மற்ற நாடுகளில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது, நம் நாட்டில் ஏன் மாற்றம் ஏற்படவில்லை, உலக பொருளாதாரம், இந்திய பொருளாதாரம், தமிழகத்தில் ஏற்கனவே நம்மை போன்று மாற்றத்திற்கு முயற்சி செய்தவர்கள் போன்ற தலைப்புகளில் சிறிய உரை அளிக்கப்பட்டது.
நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை: கேள்வி பதில்கள்
1 மணி முதல் 2 மணி வரை: மதிய உணவு இடைவேளை
2 மணி முதல் 3 மணி வரை: நமது உறுப்பினர்களின் விதிமுறைகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு விதிமுறைகள், இளையதலைமுறையின் கொள்கைகள் போன்றவற்றை காஞ்சிபுரம் ஒருங்கிணைப்பாளர் விளக்கினர்.
3 மணி முதல் 3:30 மணி வரை: சிறப்பு விருந்தினர் மூலம் மாவட்ட வாரியாக நண்பர்களை உட்கார வைத்து அதில் ஒருவரை மாவட்ட பொறுப்பாளராக தேர்வு செய்தோம். 21 மாவட்டத்திற்கு பொறுப்பாளர்கள் கிடைத்தனர்.
3:45 மணி முதல் 4:30 மணி வரை: 8 நண்பர்கள் அவர்களது கருத்தை பதிவு செய்தனர்.
3:45 மணி முதல் 4:30 மணி வரை: 8 நண்பர்கள் அவர்களது கருத்தை பதிவு செய்தனர்.
4:30 மணி முதல் 5 மணி வரை: சிறப்பு விருந்தினர்களுக்கு சிறிய பரிசு. இறுதி உரை. தேசியகீதத்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இரண்டாம் சந்திப்பு – இளைஞர் கூட்டமைப்பு உருவாக்கம் – சென்னை
27 – டிசம்பர் – 2015
அன்றைய கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 150 சமூக மற்றும் இளைஞர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இளைஞர் அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் சமூக மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியாக இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தோம். சுமார் 50 அமைப்புகள் வருகை தந்து ஒற்றுமையாக செயல்படுவோம் எனவும் 2016 தேர்தலை சந்திப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்வு சுருக்கம்:
1. தமிழ்த்தாய் வாழ்த்து.
2. வரவேற்ப்புரை – பரணிதரன்.
3. அழைப்பு விடுத்த இளையதலைமுறை பற்றிய அறிமுகம் – மதிவாணன்.
4. அனைத்து அமைப்புகளும் ஒற்றுமையாக பொதுவான பெயரில் கூட்டமைப்பாக செயல்படுவது பற்றி விளக்கவுரை.
5. அடிக்கடி ஏற்படும் கேள்வியும் அதற்கான பதில்கள் (FAQ)
6. கூட்டு ஒருங்கிணைப்பாளர் குழு உருவாக்குவது பற்றி கருத்து கேட்பு.
7. அரசியல் ஆலோசகர் நிம்மு வசந்த் அவர்கள் மண்டலம் வாரியாக அல்லது மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யலாம் என தனது கருத்துக்களை தெரிவித்தார். தோழன் RK அவர்கள் தேர்வு செய்ய சில கருத்துக்களை பதிவு செய்தார்.
8. அரசியல் விமர்சகர் சுமந்த் C. ராமன் அவர்கள் இளைஞர்களுக்கு பல கேள்விகளை தொடுத்தார். இளைஞர்கள் அனைவரும் அளித்த பதில்கள்.
கேள்வி 1: 2016 தேர்தலில் இளைஞர்கள் தற்போது உள்ள கட்சிகளை ஆதரிக்க போகிறீர்களா?
பதில்: இல்லை
கேள்வி 2: 2016 தேர்தலில் இளைஞர்கள் தனித்தனியாக நிற்க போகிறீர்களா அல்லது ஒற்றுமையாக நிற்க போகிறீர்களா?
பதில்: ஒற்றுமையாக நிற்க போகிறோம்.
கேள்வி 3: கட்சி சார்ந்து நிக்க போகிறீர்களா அல்லது சுயேட்சையாகவா?
பதில்: சுயேட்சையாக இல்லை. புதிதாக கட்சி ஆரம்பிக்காமல், சமீபத்தில் இளைஞர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளில் ஒன்றை தேர்வு செய்து பொதுவான கொள்கையின் அடிப்படையில் ஒற்றுமையாக களம் காணுவோம்.
தற்போது வந்துள்ள பல குழுவின் மூலம் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை உருவாக்கி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு உதவி செய்ய retired IAS மற்றும் அரசியல் ஆலோசகர்கள் உள்ளனர். தேர்தல் அறிக்கை மற்றும் கொள்கைகளை உருவாக்க உதவி செய்ய அனைவரும் தயார் என சுமந்த் C. ராமன் உறுதி அளித்தார்.
9. சாமுவேல், சுரேஷ் பாபு, சரவணன் ஆகியோர் மூலம் மாவட்டம் வாரியாக ஒருங்கிணைப்பு குழு உருவானது. அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். இது போல இளைஞர் அமைப்புகளை கண்டறிந்து ஒன்றாக சேர்த்து களம் காணலாம் என உறுதி கொண்டனர்.
10. இளைஞர் சுயமுன்னேற்ற பயிற்சி பாசறை – பன்னீர்செல்வம் ஐயா அவர்கள், தலைமை திறன் பயிற்சியின் அவசியம் பற்றி சிறிய விளக்க உரை அளித்தார்.
11. சுயாட்சி இயக்கம் பாலகிருஷ்ணன் அவர்கள், வலிமையான கொள்கையின் அடிப்படையில் ஒன்று சேருங்கள் என சில கருத்துக்களை பதிவு செய்தார்.
12. இளைஞர் நிஜாம் அவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சிறிய உரை அளித்தார்.
13. மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு தற்காலிக 5 பேர் கொண்ட ஆலோசனை குழு உருவாக்கப்பட்டது. புதிதாக தேர்வு செய்த குழுக்கள், தற்காலிகமாக ‘இளைஞர் கூட்டமைப்பு’என்ற பெயரில் இயங்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
14. நன்றியுரையுடன் இனிதே முடிவுற்றது.
கலந்து கொண்ட அமைப்புகள்: | |
1. விதைக்கலாம் வா 2020 | மதுரை |
2. நாளைய இந்தியா | சென்னை |
3. CRESENT ASSOCIATION | சென்னை |
4. FUTURE INDIA PARTY | சென்னை |
5. ஏரிகள் பாதுகாப்பு இயக்கம் | இராமநாதபுரம் |
6. அரண் அமைப்பு | சென்னை |
7. தாம்பரம் மக்கள் மேடை | சென்னை |
8. சிகரம் தொடுவோம் | விழுப்புரம் |
9. YOUNG INDIA REPUBLIC | கோவை |
10. அரசியல் 2016 | சென்னை |
11. NORTH CHENNAI VOLUNTEERING ASSOCIATION | சென்னை |
12. இளங்கதிர்கள் | சென்னை |
13. புதிய சிந்தனை | திருநெல்வேலி |
14. தேசிய அக்னி சிறகுகள் | சென்னை |
15. நாணல் மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்கம் | திருப்பூர் |
16. கலாம் நண்பர்கள் இயக்கம் | சென்னை |
17. YOUTH VOICE | கன்னியாகுமரி |
18. இனி ஒரு விதி செய்வோம் | விருதுநகர் |
19. YOUTH FOUNDATION | கோயம்புத்தூர் |
20. இந்திய தேசிய ஒற்றுமை புலிகள் | விழுப்புரம் |
21. தமிழ் மண்ணாலும் மாணவர் கழகம் | நாமக்கல் |
22. ஊழல் அரசியல் வெறுப்போர் சங்கம் | விருதுநகர் |
23. அண்ணனூர் எழுச்சி இளைஞர்கள் | திருவள்ளூர் |
24. விடியலை தேடும் இந்தியர்கள் கட்சி | திருச்சி |
25. இளைஞர் சுயமுன்னேற்ற பயிற்சி பாசறை | சென்னை |
26. MODERN TAMIL SOCIETY | சென்னை |
27. அறப்போர் இயக்கம் | சென்னை |
28. புதிய தேசம் | திருநெல்வேலி |
29. தோழன் | சென்னை |
30. லோக் சத்தா கட்சி | சென்னை |
31. இளைய பாரதம் கட்சி | திருநெல்வேலி |
32. சிநேகம் மக்கள் இயக்கம் | சென்னை |
33. FICAS | சென்னை |
34. PROVOKE FOUNDATION | சென்னை |
35. நாங்கள் வருகிறோம் | சிவகாசி |
36. வையத் தலைமை கொள் | சிவகங்கை |
37. GABS | சென்னை |
38. பாரத தூண்கள் | விழுப்புரம் |
39. NCVA | சென்னை |
40. சிட்லபாக்கம் ரைசிங் இளைஞர்கள் குழு | சென்னை |
41. சிவகாசி முகநூல் நண்பர்கள் | விருதுநகர் |
42. தலைமுறைகள் | நாமக்கல் |
43. Next Generation | காஞ்சிபுரம் |
44. Master of Social Work இளைஞர்கள் குழு | சென்னை |
45. சிறகுகள் | சென்னை |
46. சுயாட்சி இயக்கம் | சென்னை |
47. காகிதபுரம் Welfare Association | சென்னை |
48. சுமந்த் C. ராமன், அரசியல் விமர்சகர் | சென்னை |
49. நிம்மு வசந்த், அரசியல் ஆலோசகர் | சென்னை |
50. இளையதலைமுறை | சென்னை |
50க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் இளையதலைமுறை நண்பர்கள் என சுமார் 150 நண்பர்கள் கலந்து கொண்டனர். வர இயலாத அமைப்புகள் தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
இளையதலைமுறை / இளைஞர் கூட்டமைப்பு செயல்வீரர்கள் சந்திப்பு, சென்னை
18 – ஜூலை – 2016
இடம்: ICSA Center, Egmore, Chennai
காலை 9:30 மணிக்கு துவங்க வேண்டிய கூட்டம் சிறிது தாமதமாக 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. நிகழ்ச்சி நிரலில் உள்ளதுபடி, காலை பகுதி இளையதலைமுறை பற்றியும் மற்றும் சமூகம் சார்ந்த களப்பணிகள் முன்னெடுப்பது எவ்வாறு என்பதை பற்றியும் நிகழ்ந்தது. ஐம்பது பேர் கலந்து கொண்டு தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டனர்.
10:05 AM: இளையதலைமுறை பற்றிய சிறிய அறிமுகம். இதன் மூலம் முன்னெடுத்த களப்பணிகள் பற்றிய 15 நிமிட காணொளி காண்பிக்கப்பட்டது.
10:20 AM: மதுரை அருண் மற்றும் கோவை கார்த்திக் ஆகியோர் சமூகம் சார்ந்த களப்பணிகள் முன்னெடுப்பது பற்றியும், குழுவாக எவ்வாறு செயல்படுதல் என்பது பற்றியும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நண்பர்களின் கேள்விகளுக்கு பதில்களும் அளிக்கப்பட்டன.
11:15 AM: இளையதலைமுறை அமைப்பு மூலம் என்னென்ன களப்பணிகள் மேற்கொள்ளலாம் என கூறப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம், இளையதலைமுறை உறுப்பினர்களுக்கு வருட சந்தா ரூ. 365 என முடிவு செய்யப்பட்டது. இளையதலைமுறை அமைப்பிற்கு புதிய தலைமைக்குழு உருவாக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி,
1. அருண்குமார், மதுரை
2. கார்த்திக்குமார், கோவை
3. விவேகானந்தன், ஈரோடு
4. முஹம்மது, சென்னை
5. கார்த்திக், காஞ்சிபுரம்
6. தமிழ்மணி, திருவள்ளூர்
மேற்கூறிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அடுத்த அனைத்து மாவட்ட நண்பர்கள் சந்திப்பு மதுரையில் ஜனவரி 29, 2017 என முடிவு செய்யப்பட்டது.
11:50 AM: சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்ட சமூக ஆர்வலர்/திரைப்பட நடிகர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி @ கிட்டி அவர்கள் கலந்து கொண்டு இன்றைய சமூகம் எப்படி உள்ளது பற்றியும், எந்த வகையான மாற்றங்கள் தேவை எனவும், பொது வாழ்வில் ஈடுபட விரும்புவோர்க்கு என்னென்ன தகுதிகள் தேவை எனவும், தலைமை திறன் பற்றியும் மற்றும் பல அருமையான கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
12:50 AM: இளையதலைமுறையில் அவரவர் பகுதியில் குழுவை உருவாக்கி சிறந்த களப்பணிகள் செய்த 4 தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு விருந்தினர் மூலம் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்கள்.
1. அருண்குமார், சமயநல்லூர், மதுரை
2. கார்த்திக்குமார், மேட்டுப்பாளையம், கோவை
3. விவேகானந்தன், ஈரோடு
4. அருள் ஜெகன், திருநெல்வேலி
சிறப்பு விருந்தினருடன் குழுவாக இளையதலைமுறை நண்பர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
1:00 PM: மதிய உணவு இடைவேளை
2:00 PM: இளைஞர் கூட்டமைப்பு பற்றிய சிறு அறிமுகம்.
2:30 PM: இளைஞர் கூட்டமைப்பு மூலம் களம் கண்ட வேட்பாளர்கள் சிலர் புவியரசன், அருள், மகாராஜன், ஜாபர், பாலமுருகன், சேவாள், ராஜசேகரன், சுதிர், மற்றும் பாண்டிய பிரபு ஆகியோர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
3:30 PM: இளைஞர் கூட்டமைப்பு இனி சமூகம் சார்ந்த களப்பணிகளை மற்ற அமைப்புகளோடு இணைந்து செயல்படும் என முடிவு செய்யப்பட்டது. புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை பற்றிய கருத்துக்களை சர்வே form மூலம் பூர்த்தி செய்து பெறப்பட்டது.
4:30 PM : புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்ய
1. கட்சி பணி குழு,
2. தேர்தல் பணி குழு,
3. சட்ட குழு,
4. விளம்பர குழு,
5. நிதி குழு
மேற்கூறிய குழுக்களை மேற்பார்வையிட “கண்காணிப்பு குழு” உருவாக்கப்பட்டது.
5:00 PM: அஸ்ஸாம் மாநிலத்தை சார்ந்த ஒருவர் இளையதலைமுறை இரத்த வங்கி மூலம் மிக அறிய இரத்தம் பெற்றதை பற்றியும், அதற்கு கார்த்திக் மற்றும் செல்வி அவர்கள் எவ்வாறு இரத்தம் பெற உதவியாக இருந்தனர் என விவரித்து தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
5:30 PM: குழுவாக புகைப்படம் எடுத்தபின் அனைவரும் தொடர்ந்து செயல்படுவோம் என உறுதி கொண்டோம்.
நிகழ்வில் பகிரப்பட்ட கருத்து தொகுப்பு (POWERPOINT PRESENTATION):
அனைத்து புகைப்படங்களையும் பார்க்க
மூன்றாம் சந்திப்பு – மதுரை
26 – பிப்ரவரி – 2016
இளையதலைமுறை 3ஆம் சந்திப்பு – நேற்று(26/02/2016) அனைத்து மாவட்ட நண்பர்கள் சந்திப்பு மதுரையில் சிறப்பாக நடைபெற்றது.
1. கடந்த 6 மாதத்தில் இளையதலைமுறை செய்த களப்பணிகள், களப்பணிகளை முன்னெடுப்பது எவ்வாறு என விளக்கப்பட்டது.
2. சிறப்பு விருந்தினராக சிவகாசியை சார்ந்த திரு. சரவணகாந்த் அவர்களும், பல ஊழல் வாதிகளை கையும் களவுமாக பிடித்த சேலம் மாவட்டத்தை சார்ந்த திரு. சுரேந்தர் அவர்களும் கலந்து கொண்டனர்.
3. சிறந்த களப்பணியாளர் விருதகள் தஞ்சாவூர் வினோத், சென்னை ஜெயராம பாலன், மதுரை சுருளி முத்து, பிரஷாந்த், கோயம்புத்தூர் கோகுல் ராஜ், திருப்பூர் ரகுநாத பூபதி, தூத்துக்குடி சேது கண்ணன், கரூர் ஆனந்த், நாமக்கல் விஜய் பிரகாஷ் ஆகிய 9 பேருக்கு வழங்கப்பட்டன.
4. உள்ளாட்சி பற்றிய முழுமையான விவரங்களை காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த தேவா அவர்கள் விளக்கினார். காணொளி விரையில் பகிரப்படும்.
5. வார்டு உறுப்பினராக போட்டியிட விரும்பும் இளைஞர்களுக்கு தேர்தலை எவ்வாறு சந்திப்பது மற்றும் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி வார்டு உறுப்பினராக இருந்த திரு. கருப்ப சாமி அவர்கள் மிக விரிவாக விளக்கினார். காணொளி விரையில் பகிரப்படும்.
6. தேர்தலை சந்திக்க தேவையான உக்திகளை வந்திருந்த அனைவரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.
7. சேலம் சுரேந்தர் அவர்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு உதவலாம் எனவும், 100 நாள் வேலை செய்பவர்களை எவ்வாறு சிறப்பாக செயல்பட வைக்கலாம் எனவும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
மிக சிறப்பாக ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும், சிறப்பு விருந்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள். அடுத்த சந்திப்பு கோவையில் என முடிவு செய்யப்பட்டது.
நான்காம் சந்திப்பு, கோவை
20 – ஆகஸ்டு – 2017
இளையதலைமுறை அனைத்து மாவட்ட நண்பர்கள் நான்காம் சந்திப்பு கோவையில் 20/08/2017 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
உள்ளாட்சியில் இளைஞர்களின் பங்கு பற்றி திரு. செந்தலை கௌதமன் அவர்களும், சமூக களப்பணியில் ஊடகங்களின் பங்கு பற்றி திரு. விஸ்வா விஷ்வநாத் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்…
கடந்து 6 மாதத்தில் இளையதலைமுறை அமைப்பில் சிறப்பாக செயல்பட்ட களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் அளித்து கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த 6 மாதத்தில் இளையதலைமுறை மூலம் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
28/02/2017 – சோளிங்கர் இளையதலைமுறை சார்பாக மரம் நடுதல்
05/03/2017 – பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து ‘நமது வாடும் நமது வீடே’ நிகழ்வு துவங்கப்பட்டது.
தொடர்ந்து பல வாரங்கள் களப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
05/03/2017 – மெக்கானிக் ஷாப் அமைக்க வேளச்சேரி மின்சார விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ. 40000 நிதியுதவி வசூல் செய்யப்பட்டது. மெக்கானிக் ஷாப் இடம் கிடைக்காததால் நிதி இன்னும் கொடுக்கவில்லை.
05/03/2017 & 11/03/2017 – திருவாரூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட 6 விவசாயிகளுக்கு சுமார் 2.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
13/03/2017 – ஆர்.கே நகரில் போட்டியிட வேட்பாளர் ஆராயப்பட்டு திருமதி. புவனேஸ்வரிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
18/03/2017 – திரு. பன்னீர் செல்வம் அவர்கள் மூலம் தலைமை திறன் பயிற்சி சுமார் 40 பேருக்கு அளிக்கப்பட்டது.
26/03/2017 – காகிதபுரம் பகுதியில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
26/03/2017 to 09/04/2017 – நாம் ஆதரவு அளித்த ஆர்.கே நகர் வேட்பாளருக்காக தேர்தல் பிரச்சாரம் துவங்கப்பட்டு சுமார் 44 பேர் கலந்து கொண்டனர். ரூ. 14500 நிதியுதவி செய்தனர்.
09/04/2017 – பனைகள் கோடியின் முதல் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து திருச்சி, விருதுநகர் என நடைபெற்றது.
16/04/2017 – நாமக்கல் & கரூர் இளையதலைமுறை ஒன்று சேர்ந்து அரசு பள்ளி மாணவர்களின் திறனறியும் போட்டிகள் நடத்தி பரிசுகள் அளித்தனர்.
23/04/2017 – சென்னையில் சுமார் 25 பேர் கலந்து கொண்டு RTI பற்றியும் RTE பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
28/04/2017 to 31/05/2017 – RTE பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுமார் 150 குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் இலவசமாக படிக்க விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது. இதில் சுமார் 20 தன்னார்வலர்கள் உதவி செய்தனர்.
30/04/2017 – சமயநல்லூர் இளையதலைமுறை சார்பாக இயற்கை வழி உணவு பற்றிய விழிப்புணர்வு, மரம் நடுதல் போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
30/04/2017 – angels of marina அமைப்போடு இணைந்து மெரினா கடற்கரை சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.
01/05/2017 & 15/08/2017 – இரு நாட்களிலும் கிராம சபா கூட்டத்தில் பல நண்பர்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
07/05/2017 – சோளிங்கர் இளையதலைமுறை மூலம் கோவில் திருவிழாவில் வந்த மக்களிடம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது. வெய்யிலின் தாக்கத்தை தணிக்க அனைவருக்கும் இலவசமாக மோர் அளிக்கப்பட்டது.
14/05/2017 to 09/07/2017 – கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள குளத்தை தேர்வு செய்து வெல்க பாரதம் அமைப்போடு இணைந்து சுமார் 10 வாரங்களுக்கு மேல் சுத்தம் செய்து, மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்தோம். எதிரே உள்ள அரசு பள்ளியிலும் மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்தோம். இந்த காணொளிகளை சுமார் 3 லட்சம் பேர் இணையத்தில் கண்டனர்.
27/05/2017 & 25/06/2017 – மரபணு மாற்று கடுகை எதிர்த்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நண்பர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தாம்பரத்தில் நடைபெற்ற கருத்தரங்கிலும் கலந்து கொண்டோம்.
15/06/2017 – கோவை இளையதலைமுறை சார்பாக இரத்த கொடையாளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
18/06/2017 – மேலூர் இளையதலைமுறை சார்பாக கண்மாய்யை சுத்தம் செய்யும் முதல் களப்பணியை மேற்கொண்டனர்.
25/06/2017 – அள்ளியூர் இளையதலைமுறை சார்பாக சீமை கருவேல மரங்களை அழித்தல். மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்தல். மாதிரி கிராம சபை கூட்டம் நடத்துதல் என பல நிகழ்வுகளை முன்னெடுத்தனர் .
02/07/2017 – கடவு சீட்டில் இந்தியை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். சுமார் 33 பேர் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர்.
06/07/2017 & 15/07/2017 – பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் முன்னெடுத்த நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோம். அதனை தொடர்ந்து, ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தேர்வு கருத்தரங்கிலும் கலந்து கொண்டோம்.
16/07/2017, 23/07/2017 – சிவகாசி முகநூல் நண்பர்கள் முன்னெடுத்த பேருந்து நிறுத்தம் சுத்தம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் களப்பணி.
16/07/2017 – சோளிங்கர் இளையதலைமுறை சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள் அளிக்கப்பட்டன.
22/07/2017 – ராஜபாளையம் ராம் அவர்கள் கோவிலம்பாக்கம் மட்டுமல்லாமல் அரசு பள்ளி, கடற்கரை, மரம் நடுதல் என பல்வேறு களப்பணிகளில் அவராகவே கலந்து கொண்டு அவரது தெருவில் உள்ளவர்களை ஒன்று சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி களப்பணிகள் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
28/07/2017 – குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சமூக போராளிகளை விடுவிக்க கோரி மே 17 இயக்கம் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டோம்.
30/07/2017 – மேலூர் இளையதலைமுறை சார்பாக பேருந்து நிறுத்தம் சுத்தம் செய்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த காணொளியை சுமார் 1 லட்சம் பேர் இணையத்தில் கண்டனர்.
04/08/2017 – சிட்லபாக்கம் ரைசிங் குழுவினர் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்தனர்.
06/08/2017 – பனைகள் கோடியின் முதல் விதை பெருங்குளத்தூர் ஏரியில் விதைக்கப்பட்டது.
06/08/2017 – சாலை போக்குவரத்து விழிப்புணர்வு தோழன் அமைப்போடு இணைந்து சுமார் 72 பூங்காக்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.
12/08/2017 – சோளிங்கர் இளையதலைமுறை சார்பாக நெகிழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சுமார் 500 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சோளிங்கர், அள்ளியூர், கோவை, சென்னை, காஞ்சிபுரம், மேலூர், சமயநல்லூர், சிவகாசி, நாமக்கல், கரூர் ஆகிய 9 பகுதிகளில் களப்பணிகளை முன்னெடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
உதவிகள்:
1. 5 ஏழை மாணவர்களின் மேற்படிப்பிற்கு ரூ.80000 நன்கொடையாக அளிக்கப்பட்டது.
2. ஏழை மாற்று திறனாளி ஒருவருக்கு மெக்கானிக் ஷாப் அமைக்க ரூ. 15000 நான்கொடை அளிக்கப்பட்டது.
3. நெல்லை நண்பர் அருள் ஜெகன் அவர்களின் மருத்தவ செலவிற்கு ரூ. 1 லட்சம் நன்கொடை அளிக்கப்பட்டது. இதில், friends2care அமைப்பின் சார்பாக ரூ. 20000 அளிக்கப்பட்டது.
மேலும் அறிய முகநூல் பக்கம் பார்க்க
ஐந்தாம் சந்திப்பு, நாமக்கல்
18 – மார்ச் – 2018
இடம்: SBM மேனிலை பள்ளி, நாமக்கல்
சிறப்பு விருந்தினர்: திரு. S. தீன தயாளன், RTI Activist, பெங்களூரு
நாமக்கல் அரசு பள்ளி மாணவர் அறிவழகன் மற்றும் சிவகாசி பாலிடெக்னிக் மாணவர் இம்மானுவேல் என இருவருக்கும் இளையதலைமுறை இளம் விஞ்ஞானி விருது அளிக்கப்பட்டது. ஒருவர் சைக்கிளை ஸ்கூட்டர் போல வடிமைதுள்ளர். மற்றொருவர் கழிவு நீரை குடிநீராக மற்றும் சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்.
நிகழ்வில் RTI பற்றி திரு. தீன தயாளன் அவர்கள் விரிவாக எடுத்து கூறினார். உள்ளாட்சி, கிராமசபை, RTE பற்றி சங்கர் அவர்கள் எடுத்து கூறினார்.
கடந்த 6 ,மாதங்களில் சிறப்பாக களப்பணியாற்றிய செயல்வீரர்களுக்கு இளையதலைமுறை விருது அளித்து கௌரவவிக்கப்பட்டது .
கடந்த 6 மாதத்தில் இளையதலைமுறை மூலம் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்.
26/08/2017 – பச்சை தமிழகம் சார்பில் நடைபெற்ற உள்ளாட்சி பற்றிய விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டோம்.
02/09/2017 – சிவகாசி, சென்னை, கோவை என 3 பகுதிகளில் மாணவி அனிதா இறப்பிற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினோம்.
10/09/2017 – சென்னையில் வள்ளுவர் கோட்டம், அம்பத்தூர், பல்லாவரம், சோழிங்கநல்லூர் என 4 பகுதிகளில் சுமார் 100 பேர் கலந்து கொண்டு நீட் விலக்கு கோரி போராட்டம் நடத்தினோம்.
17/09/2017 – சென்னையில் ஸ்பென்சர் பிளாசா அருகில் சுமார் 40 பேர் கலந்து கொண்டு நீட் விலக்கு கோரி போராட்டம் நடத்தினோம்.
23/09/2017 – மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறையில் இருந்து வந்தவுடன் நடத்திய கூட்டத்தில் பெருவாரியாக கலந்து கொண்டு ஆதரவு அளித்தோம்.
25/09/2017 – அம்பத்தூர் பகுதியில் 12 பேர் கலந்து கொண்டு அடுத்த கட்ட நிகழ்வுகளை பற்றி விவாதம் நடத்தினோம்.
01/10/2017 – தமிழகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டோம்.
10/10/2017 – இளந்தமிழர் முன்னணி கழகம் சார்பில் நடைபெற்ற நீட் விலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டோம்.
14/10/2017 – உள்ளாட்சி பற்றி விழிப்புணர்வு நிகழ்வில் பல உள்ளாட்சி பற்றிய கேள்விகளுக்கு தி இந்து பத்திரிக்கை சஞ்சீவி குமார் அவர்கள் மூலம் பதில் அளிக்கப்பட்டது.
14/10/2017 – கரூர் இளையதலைமுறை சார்பில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
15/10/2017 – கடவுள், மதம், பெரியார் பற்றிய விவாதம் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.
29/10/2017 – ஜி.எஸ்.டி விலக்கு கோரி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.
30/10/2017 – கும்பகோணம் நண்பர்கள் ஒன்று சேர்ந்து பொது இடத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகளை நட்டனர்.
31/10/2017 – கோவிலம்பாக்கம் நண்பர்கள் ஒன்று சேர்ந்து சிறு மழைக்கு ஏற்படும் வெள்ளத்தை தொடருக்கு கோரி போராட்டம் ஒன்றை நடத்தினர்.
04/11/2017 – களம் – நதிநீர் இணைப்பு தேவையா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
05/11/2017 – பஞ்சப்பட்டி ஏரி தூருவாரும் பணி துவங்கப்பட்டது.
02/12/2017 – திரு. பன்னீர் செல்வம் அவர்கள் மூலம் தலைமை திறன் பயிற்சியில் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
03/12/2017 – பஞ்சப்பட்டி ஏரி தூருவாரும் பணி நடைபெற்றது.
12/12/2017 – ஒக்கி புயலில் சிக்க மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கூறி இளந்தமிழர் முன்னணி கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு அளித்தோம்.
17/12/2017 – திக்குகள் எட்டும் அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்வில் இளையதலைமுறை அமைப்பை பற்றி சுருக்கமாக விளக்க உரை அளித்தோம்.
23/12/2017 – நையப்புடை விவாத நிகழ்வில் தாய்மொழி வழி கல்வி சிறந்ததா அல்லது ஆங்கில வழி கல்வி சிறந்ததா என்ற தலைப்பில் இளையதலைமுறை சார்பில் பேச்சாளராக கலந்து கொண்டோம்.
31/12/2017 – உள்ளாட்சி, கிராமசபை பற்றி விழிப்புணர்வு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
06/01/2018 – சிட்லப்பாக்கம் ரைசிங் குழுவினர் முன்னெடுத்த RTI, RTE, நீர் மேலாண்மை நிகழ்வில் இளையதலைமுறை பற்றி சுருக்கமாக எடுத்து கூறினோம்.
07/01/2018 – சமயநல்லூர் இளையதலைமுறை குழுவினர் பல வாரங்களாக வீடுவீடாக சென்று பாரம்பரிய உணவு முறைகளை பற்றிய விழிப்புணர்வு
26/01/2018 – 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நண்பர்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
26/01/2018 – நாமக்கல், கரூர், சேலம் இளையதலைமுறை அணி 4 சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு திறனறியும் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது.
26/01/2018 – RTI பற்றிய விளக்க உரை ராம் அவர்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
28/01/2018 – கரூர் பஞ்சப்பட்டி ஏரியை தூர்வாரும் பணியை பல வாரங்களாக செய்து வருகின்றனர். சபரி கிரீன் அமைப்பு மற்றும் புதிய தலைமுறை நம்மால் முடியும் குழுவும் ஆதரவாக கலந்து கொண்டனர்.
28/01/2018 – பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்.
29/01/2018 – பேருந்து கட்டண உயர்வை குறைக்க கோரி போக்குவரத்து துறை அமைச்சரிடம் மனு.
03/02/2018 – பெற்றோர்கள் சங்கம் சார்பில் தனியார் பள்ளி கட்டண கொள்ளையை கண்டித்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் போராட்டம்.
03/02/2018 – மே 17 இயக்கம் சார்பாக பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்.
04/02/2018 – இளந்தமிழர் முன்னணி கழகம் சார்பாக பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சோழிங்கநல்லூரில் போராட்டம்.
19/02/2018 – இளந்தமிழர் முன்னணி கழகம் சார்பாக நீட் விலக்கு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
19/02/2018 – நாமக்கல் இளையதலைமுறை சார்பாக நீட் விலக்கு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
25/02/2018 – தமிழக மக்கள் கழகம் சார்பாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
26/02/2018 – நாமக்கல், கரூர், சேலம் இளையதலைமுறை அணி 4 சார்பாக நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
27/02/2018 – பல்வேறு அமைப்புகள் ஒன்று கூடி, சிரியாவில் போரை நிறுத்த கோரி ரஷ்ய தூதரகத்தில் மனு.
28/02/2018 – பல்வேறு அமைப்புகள் ஒன்று கூடி, சிரியாவில் போரை நிறுத்த கோரி அமெரிக்க தூதரகத்தில் மனு.
03/03/2018 – ஜாதி ஒழிப்பு, ஜாதி வாரி இட ஒதுக்கீடு, ஜாதி மறுப்பு திருமணம், ஆணவ கொலை போன்ற தலைப்புகளில் விவாதம்.
04/03/2018 – தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு முன்னெடுத்த ‘சிரியாவில் போரை நிறுத்த கோரி ஒன்று கூடல்’நிகழ்வில் கலந்து கொண்டு முழு ஆதரவை அளித்தோம்.
10/03/2018 – மாற்று அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என 6 அமைப்புகள்/கட்சிகள் சார்பில் பொதுவான விவாதம் முன்னெடுக்கப்பட்டது.
கோவை, சென்னை, காஞ்சிபுரம், சமயநல்லூர், சிவகாசி, நாமக்கல், கரூர் ஆகிய 7 பகுதிகளில் களப்பணிகளை முன்னெடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இளையதலைமுறை மீம்ஸ், வாய்ஸ் ஆப் ஜோக்கர்ஸ் ஆகியவை விழிப்புணர்வு காணொளிகள், புகைப்படங்கள் வடிவமைக்க புதிதாக உருவாயின.
உதவிகள்:
03/02/2018 – உறவுகள் அமைப்பிற்கு மினி ஆம்புலன்ஸ் வாங்க ரூ.10800 நன்கொடையாக வழங்கப்பட்டது.
12/10/2017 – வேளச்சேரி மின்சார விபத்தில் இறந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ரூ.2500 மதிப்புள்ள புதிய துணிமணிகள் எடுத்து கொடுத்தோம்.
05/11/2017 – பஞ்சப்பட்டி ஏரியை தூர்வார ரூ.10,400 அளிக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பிக் பேங் கிட் வாங்க ரூ.4000 வழங்க பட்டது.
25/11/2017 – RTI பற்றிய விழிப்புணர்வு திரைப்படம் எடுத்து இயக்குனர் மகனுக்கு மருத்துவ செலவிற்கு ரூ.12,000 வழங்கப்பட்டது.
03/02/2018 – உறவுகள் அமைப்பிற்கு மினி ஆம்புலன்ஸ் வாங்க ரூ.10800 நன்கொடையாக வழங்கப்பட்டது.
நாமக்கல் சந்திப்பு… 18/03/2018… காணொளிகள் .
1. நாமக்கல் அரசு பள்ளி மாணவர் அறிவழகன் மற்றும் சிவகாசி பாலிடெக்னிக் மாணவர் இம்மானுவேல் என இருவருக்கும் இளையதலைமுறை இளம் விஞ்ஞானி விருது அளிக்கப்பட்டது. ஒருவர் சைக்கிளை ஸ்கூட்டர் போல வடிமைதுள்ளர். மற்றொருவர் கழிவு நீரை குடிநீராக மற்றும் சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்.
2. கடந்த 6 மாதத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு சிறந்த செயல்வீரர் விருது அளிக்கப்பட்டது.
3. நாமக்கல் சந்திப்பில் இளையதலைமுறை அமைப்பிற்கு புதிய இலட்சினை வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது… இலட்சினையை வடிவமைத்த திரு. ஸ்ரீகுமார், சேலம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்…
4. திரு. தீன தயாளன் அவர்கள் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய கலந்துரையாடல்.
5. சமூக களப்பணிகள் முன்னெடுப்பது, உள்ளாட்சி, கிராமசபை பற்றிய உரையாடல்.
கேமரா பேட்டரி முடிவடைந்ததால் அலைபேசி மூலம் பதிவு செய்த, மேலுள்ள காணொளியின் தொடர்ச்சி கீழ்க்கண்ட நேரலை காணொளியில் காணலாம்.
காணொளி பார்க்க
காணொளி பார்க்க
காணொளி பார்க்க
6. நண்பர்களின் அறிமுக உரை…